இந்த நேரத்தில்தான் செவ்வாழை சாப்பிடனும் - எதனால் தெரியுமா?

Red banana
By Sumathi Mar 08, 2024 11:54 AM GMT
Report

செவ்வாழைப்பழத்தின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

செவ்வாழை

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

red banana

தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குறிப்பாக, செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி.

நரம்பு தளர்ச்சி, தோல், பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த ஒரே பழத்தில் உண்டு - இதை படியுங்கள்

நரம்பு தளர்ச்சி, தோல், பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த ஒரே பழத்தில் உண்டு - இதை படியுங்கள்

நன்மைகள்

இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது.

இந்த நேரத்தில்தான் செவ்வாழை சாப்பிடனும் - எதனால் தெரியுமா? | Health Benefits Of Red Banana

கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

மேலும், இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகளை செவ்வாழை கொண்டுள்ளது.