அதிமுக பொதுக்குழு வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவின் பொதுக்குழு நாளை மறுநாள் கூடவிருக்கும் நிலையில் பொதுக்குழுவினை எப்படியாது தள்ளிப்போட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
யாருக்கு ஒற்றை தலைமை
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பொதுக்குழுவை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து மூன்று தரப்பினர் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையின் கேள்விகளுக்கு இன்று மதியம் 1 மணிக்குள், அதிமுக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் முன்னின்று காத்து நிற்பேன் : எடப்பாடி பழனிசாமி