எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது : வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் அதிமுக
அதிமுகவில் தற்போதுன்யாருக்கு ஒற்றை தலமை என்ற போட்டி நிலவி வருகிறது , எடப்பாடி பழனிசாமிக்கு ஆதர்வானவர்கள் ஒற்றை தலமைக்கு ஆதரவு கொடுக்க ஓ.பன்னீர்செல்வத்திற்குஆதரவானர்கள் இரட்டை தலமை தேவை என முழக்கம் எழுப்ப கடந்த சில நாட்களாக அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதில் அதிமுகவின் சில முக்கிய அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் 23ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தள்ளிவைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம், தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்
எடப்பாடிக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை வைத்திலிங்கம் செய்தியாளர்கள் முன்பு வாசித்தார். அதில், ஜெயலலிதா இருந்த போது பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர் .
ஒற்றைத்தலைமை பற்றி பேசப்பட்டதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர்.
15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவுவதால் ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
மேலும் எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிப்பதாக வைத்திலிங்கம் கூறினார்.
நான் ஓ.பி.எஸ் பக்கமும் இல்லை, ஈ.பி.எஸ் பக்கமும் இல்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்