நான் ஓ.பி.எஸ் பக்கமும் இல்லை, ஈ.பி.எஸ் பக்கமும் இல்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
ஒற்றை தலைமை என்று மட்டும் தான் கூறினேன்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தான் நான் ஊடகங்களில் தெரிவித்தேன், நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை. ஒற்றை தலைமை என்று மட்டும் தான் கூறினேன், அந்த தலைமை யார் என்று தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஒற்றை தலைமை குறித்து கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. கட்சியை பொறுத்தவரை ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான் முடிவு. எனவே, அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்.
ஓரம் கட்டும் எண்ணம் இல்லை
ஒற்றை தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. நான் ஓ.பி.எஸ் பக்கமும் இல்லை, இ.பி.எஸ் பக்கமும் இல்லை ஓபிஎஸ், இபிஎஸ் எனது வீட்டுக்கு வந்தால் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கு அதிமுகவும் எந்த சம்பந்தம் இல்லை, அவரை போல ஓபிஎஸ்-க்கும் நடக்கும் என கூறுவது தவறு என்றும் குறிப்பிட்டார்.
என்னை நீக்கியவர் ஓ.பி.எஸ், இருந்தாலும் அண்ணனாக நினைக்கிறேன் : பாசத்தில் பொங்கிய புகழேந்தி