என்னை நீக்கியவர் ஓ.பி.எஸ், இருந்தாலும் அண்ணனாக நினைக்கிறேன் : பாசத்தில் பொங்கிய புகழேந்தி
கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியேற முடியாது என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
புகழேந்தி ஆதரவு
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் ஓபிஎஸ் ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேசிய அவர் ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடிபழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும்.
ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை
அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளில் இடம் இருக்கிறது. நான்கு வருடத்தில் கொள்ளை அடித்தவர்கள் தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். அதிமுகவில் நிலவும் ரவுடிசத்துக்கு காரணம் ஜெயக்குமார் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், பழனிசாமி தலைமையில் கட்சி சின்னாபின்னமாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது; 500 ஓட்டு கூட வாங்க முடியாது. இந்த கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியேற முடியாது .
கட்சியில் இருந்து என்னை நீக்கியவர்களில் ஒருவராக ஓ.பி.எஸ். இருந்தாலும் ஒரு நல்ல தலைவராக அவரை பார்க்கிறேன். என்னுடைய அண்ணனாக அவரை நினைத்து இந்த இடத்தில் நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.