ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு ,பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் : எடப்பாடிக்கு வார்னிங் கொடுக்கும் ஒபிஎஸ்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 19, 2022 06:34 AM GMT
Report

ஒற்றைத்தலைமை குறித்து பொதுக்குழுவில் தனித்தீர்மானம் கொண்டுவந்தால், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையிடம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூதாகரமான ஒற்றைத் தலமை விவகாரம்

அதிமுகவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றைத் தலைமை குறித்து உட்கட்சி விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் உடன் இபிஎஸ் தரப்பு சமரச முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு ,பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் :  எடப்பாடிக்கு வார்னிங் கொடுக்கும் ஒபிஎஸ் | Single Leadership Issue In Aiadmk Compromise

கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிலிருந்து அதிமுகவில் பல்வேறு பிரச்னைகள் உருவாகி உள்ளன. இந்த நிலையில் பன்னீர்செல்வம் ஒருபுறமும் எடப்பாடி பழனிசாமி மறுபுறமும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக இந்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆறாவது நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகின .

இந்த நிலையில் தற்போது ஒ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு ,பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் :  எடப்பாடிக்கு வார்னிங் கொடுக்கும் ஒபிஎஸ் | Single Leadership Issue In Aiadmk Compromise

இதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

சமாதானம் போகும் தம்பித்துரை

அங்கு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே சமாதானம் ஏற்படுத்தும் வகையில் சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்திய நிலையில் ஓபிஎஸ் - ஐ சந்தித்துள்ள நிலையில் ஒபிஎஸ் ஒற்றைத்தலைமை குறித்து பொதுக்குழுவில் தனித்தீர்மானம் கொண்டுவந்தால், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையிடம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.   

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு - தொண்டரின் கோஷத்தால் கோபமடைந்த ஒபிஎஸ்!