ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் இதுவரை கிடைக்கவில்லை : கே.பி முனுசாமி
பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் வருவார், தீர்மானத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் தற்போதுன்யாருக்கு ஒற்றை தலமை என்ற போட்டி நிலவி வருகிறது , எடப்பாடி பழனிசாமிக்கு ஆதர்வானவர்கள் ஒற்றை தலமைக்கு ஆதரவு கொடுக்க ஓ.பன்னீர்செல்வத்திற்குஆதரவானர்கள் இரட்டை தலமை தேவை என முழக்கம் எழுப்ப கடந்த சில நாட்களாக அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதில் அதிமுகவின் சில முக்கிய அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் 23ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தள்ளிவைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம், தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்ட வட்டமாக கூறியுள்ள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பி . முனுசாமி செயற்குழு கூட்டத்தை தள்ளிவைக்க ஒபிஎஸ் தரப்பிலிருந்து கடிதம் வந்தது தங்களுக்கு தெரியாது எனக் கூறினார், மேலும் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு கண்டிப்பாக ஒபிஎஸ் வருவார் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுக் குழு கூட்டம் நடைபெறவில்லை.
ஆகவே ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலோடு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது இல்லை எனக் கூறிய கேபி முனுசாமி ஒபிஎஸ் தரப்பு கடிதம் குறித்த கேள்விக்கு அனாதை கடிதங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.
மேலும் ஒற்றை தலமை தேவையா ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் கூறிய கே.பி முனுசாமி, சில சந்தர்ப்ப வாதிகள் கட்சிக்கு கேடு விளைவிக்க நினைக்கின்றனர் என்றும் ஒற்றை தலமை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது எனக் கூறினார்.