தாடி வச்ச மாப்பிள்ளைக்கு இங்க பொண்ணு இல்ல.. ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்யும் மக்கள்!
ராஜஸ்தானில் உள்ள குமாவத் சமூகத்தினர், தாடி வைத்திருக்கும் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது,என்ற வினோதமான வழக்கத்தை கடைபிடித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன்
ராஜஸ்தான் மாநிலத்தில் குமாவத் சமூகத்தில் தான் இத்தகைய சில தீர்மானங்களை பின்பற்றி வருகின்றனர். நாகரீகம் என்ற பெயரில் மணமகன் தாடி வைக்க இந்த சமூகத்தில் அனுமதி இல்லை.
திருமணம் என்பது ஒரு சடங்கு, இதில் மணமகனை ராஜாவாகப் பார்க்க வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை. பாலி மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்களில் தாடி வைத்த மணமகன்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது
தாடி வைக்க அனுமதி இல்லை
சுத்தமான ஷேவ் செய்து கொண்ட இளைஞர்களுக்கு மட்டுமே திருமணம் என்ற விதிமுறையை கண்டிப்பாக பின்பற்றி வருகின்றனர். மேலும் ஆடம்பர திருமணங்களுக்கும் இங்கு அனுமதியில்லை.
திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கான செலவுகளைக் குறைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். வட மாநிலங்களில் பிரபலமான ஹல்டி விழாவின் போது மஞ்சளைக்கூட இவர்கள் அனுமதிப்பதில்லை.
கடுமையான கட்டுப்பாடுகள்
அதேபோல், மணமகள் அணியும் ஆடை, ஆபரணங்களிலும் கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளனர். உணவு எண்ணிக்கையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயித்துள்ளனர்.
தங்கள் சமூகத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் வகுத்துள்ளனர்.
அபராதம்
திருமண விழாக்களை சுமையாக கருதாமல், எளிதாக்குவதற்காக இத்தகைய விதிகளை அவர்கள் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. விதிகளை கடைபிடிக்காமல், அதை மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோகாலுக்கு ரூ.15ஆயிரம்..ரசிகர்களை திக்குமுக்காட செய்த நடிகை கிரண்!