பாட்டி வயசுல இது தேவையா..நயன் திருமணம் குறித்த மருத்துவர் பதிவு-வலுக்கும் கண்டனங்கள்!

Nayanthara Vignesh Shivan Gossip Today Marriage
By Sumathi 5 மாதங்கள் முன்
105 Shares

தற்போது நயன்தாராவிற்கு 37 வயதாகும் நிலையில் அவரது திருமணம் மற்றும் குடும்பம் குறித்து மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

 பாட்டி வயசுல 

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது நயன்தாராவிற்கு 37 வயதாகும் நிலையில் அவரது திருமணம் மற்றும் குடும்பம் குறித்து அறிவன்பன் திருவள்ளுவன் என்ற மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

பாட்டி வயசுல இது தேவையா..நயன் திருமணம் குறித்த மருத்துவர் பதிவு-வலுக்கும் கண்டனங்கள்! | Doctor Comment On Nayanthara Marriage And Her Age

அவர் கூறியுள்ளதாவது, நயன்தாரா 40 வயதை நெருங்கும் நிலையில் அவர் தற்போது குடும்பம், குழந்தைகள் குறித்து திட்டமிட்டுள்ளது குறித்து பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 சின்மயி எதிர்ப்பு

இதற்கும் மேல் சிறப்பு பிரிவு மருத்துவராகவும் காணப்படும் அந்த மருத்துவர், பாட்டி வயசுல என்றும் நயன்தாராவை குறிப்பிட்டுள்ளார். IVF சென்டர்கள் மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

பாட்டி வயசுல இது தேவையா..நயன் திருமணம் குறித்த மருத்துவர் பதிவு-வலுக்கும் கண்டனங்கள்! | Doctor Comment On Nayanthara Marriage And Her Age

அந்த மருத்துவரின் இந்த பதிவை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவிற்கு அவரும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதனிடையே மருத்துவரின் இந்த பதிவிற்கு நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.     

அம்மாவை பார்க்க கொச்சி சென்ற நயன்தாரா - ஏர்போர்டில் விடாமல் துரத்திய ஊழியர்கள்