கவர்ச்சி ஆப்-ல் களம் இறங்கி ரசிகர்களை அதிரவைத்த நடிகை கிரண்.!!
நடிகை கிரண் என்றாலே ஒன்று ஜெமினி இன்னொன்று வின்னர். ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கிரண்.
நடிகை கிரண்
இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். உதட்டு மேல் ஒரு மச்சம். பளிச்சென நிறம். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் ஒரு தேகம் என எல்லோரையும் கட்டிப் போட்டார்.
அஜித்துடன் வில்லன் படத்தில் நாயகியாக வலம் வந்தார். வின்னர், தென்னவன், அன்பே சிவம் என்று அடித்து தூள் கிளப்பினார்.
கவர்ச்சி மட்டுமல்ல
அன்பே சிவம் படத்தில் கமலுடன் ரொமான்ஸிலும் சரி எமோஷன் காட்சிகளிலும் சரி நன்றாக நடித்து வெறும் கவர்ச்சி மட்டுமல்ல நான் என்று உணர வைத்தார்.
விஷாலின் திமிரு படத்தில் ஒரு குத்துப் பாடலில் ஆடியிருப்பார். அதற்குபின் நீண்ட காலம் தமிழில் காண முடியவில்லை.
கிளாமரில் தாராளம்
கிளாமரில் தாராளம் என்பதால் கோலிவுட்டில் இருந்து அப்படியே டோலிவுட்டுக்கு தாவினார். அங்கு சில காலம் தாக்குப்பிடித்தார். அப்புறம் அப்படியே இந்திப் படங்களில் தலைகாட்டினார்.
பின்னர் குணச்சித்திர நடிகை, வில்லி என வாய்ப்புகளை வாங்கி நடித்தார். இந்நிலையில் தான் கிரண் ஒரு செயலியை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரண் செயலி
அந்த செயலிக்கு கிரண் தனது பெயரையே சூட்டியுள்ளார். அந்த செல்போன் செயலியில், தன்னுடன் ஆடியோவில் பேச, வீடியோ காலில் பேச,
தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க என பல்வேறு சேவைகளுக்கு தனித்தனியாக கட்டண விவரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறார் கிரண்.
10 நிமிட வீடியோகாலுக்கு ரூ.15ஆயிரம், இன்பாக்ஸில் ஹாட் போட்டோவை தட்டிவிட வேண்டுமென்றால் ரூ.2ஆயிரம், கிரணை நேரடியாக சந்திக்க வேண்டுமென்றால் ரூ.1.5லட்சம் என பல கட்டண விவரங்களை வைத்துள்ளாராம் கிரண்.
இந்த செயலியை பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ரூ.49 கட்டணம் கட்டவேண்டும். இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
பல் வலிக்கு சிகிச்சை.. நடந்த சோகம் - பதறிய நடிகை!