கொட்டாவியால் நேர்ந்த சோகம்; பேச முடியாமல் தவிக்கும் இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்!
இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாவி
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் ஜென்னா சினாட்ரா (21). இவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வேதனை தெரிவித்தது ஜென்னா சினாட்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அந்த இளம்பெண்ணின் தாடை திறந்த நிலையில் உள்ளது. மேலும், அதற்காக அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டது குறித்து அவர் விளக்கியுள்ளார்.
நம்ப முடியவில்லை
இதுதொடர்பாக ஜென்னா சினாட்ரா கூறுகையில் "இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது.
இதனால் என்னால் பேச முடியாமல் தவித்தேன். பின்னர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடினேன். அவர் உரிய சிகிச்சைகளை அளித்த பிறகுதான் சரியானது" என்று தெரிவித்துள்ளார்.