புள்ள தலையை முடியோடு பிய்த்து தனியே எடுத்த நாய்கள்; உயிருக்கு போராடும் மகள் - தந்தை வேதனை!
நாய் கடித்த குழந்தை உயிருக்கு போராடுவதாக தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
உயிருக்கு போராடும் குழந்தை
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் மாடல் பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 5 வயதில் சுதிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தை இரவு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, புகழேந்தி என்பவருக்கு சொந்தமான ராட்வைலர் நாய்கள் பூங்காவுக்குள் வந்து சிறுமியை கடித்து குதறியுள்ளன.
நாயை தடுக்காமல் புகழேந்தி தூரமாக ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, குழந்தை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த பேட்டியில், என் குழந்தை பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தது. என் மனைவி வெளியே சாமான் கழுவிக் கொண்டிருந்தார்.
தந்தை கண்ணீர்
அந்த 2 நாய்களும் என் குழந்தையை கடித்ததால் என் புள்ளை சாகும் நிலையில் இருக்கிறது. குழந்தையின் நிலையை பற்றி சொல்லவே முடியவில்லை. என் புள்ள சாகும் நிலையில் இருக்கிறது. என்னை உள்ளே விட மாட்டேங்கிறார்கள். என் குழந்தையை நாய்கள் கடித்த போது அந்த உரிமையாளர் ஓடிவிட்டார்.
இரு தொடைகளையும் குதறிவிட்டுள்ளது. குழந்தையின் மண்டையை டிபன் பாக்ஸ் மூடி போல் அந்த நாய்கள் கடித்து திறந்துவிட்டன. குழந்தையின் மண்டையில் அந்த பாகத்தை அப்படியே தையல் ஏதும் போடாமல் வைத்துள்ளார்கள்.
குழந்தையை நாய் கடித்த போது நான் விழுப்புரத்தில் இருந்தேன், அதுதான் என் சொந்த ஊர். அந்த நாய்களின் உரிமையாளரை கைது செய்யவே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.