சிறுவனை கடித்த பொமரேனியன் நாய்.. பெற்றோருக்கு பயந்து மறைத்ததால் ஏற்பட்ட விபரீதம்!
பக்கத்துக்கு வீட்டு நாய் சிறுவனை கடித்ததால் நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்த சிறுவன்
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரண் சிங் காலனியை சேர்ந்தவர் யாக்கூப். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஷாவாஸ், 14 வயதான சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்துக்கு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு பொமரேனியன் நாய் வங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த நாய் இந்த சிறுவனை கடித்துள்ளது, பெற்றோரிடம் கூறினால் அடிப்பார்கள் என்று பயந்து அவர் மறைத்துள்ளார்.
சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலையில் இருந்து சிறுவனின் உடல் மோசமடைந்துள்ளது. அவரது நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனை கண்டு பதறிப் போன பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு நாய் கடித்து விஷம் எறியுள்ளதாக கூறினர். அப்பொழுது அந்த சிறுவர் பக்கத்துவீட்டு நாய் கடித்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில் பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சிறுவரின் பெற்றோர் புகாரளித்தனர். இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்த சுனிதா, ஆகாஷ், ஷிவானி மற்றும் ராஷி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாய் குட்டிக்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.