நாயை போலவே மாறிய சிறுவன்.. உயிருக்கு ஆபத்து - என்ன நடந்தது?
வெறி பிடித்த நாய் கடித்ததால், சிறுவன் ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளான்.
ரேபிஸ் பாதிப்பு
உத்தரபிரதேசம், ஆக்ராவில் 8 வயது சிறுவனை வெறிபிடித்த தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவனை கடித்த நாய் வெறிபிடித்த நாய் என்பதால்,
சிறுவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால், சிறுவனின் செயல்பாடுகளும் நாயைப் போலவே ஊளையிடுவது, குரைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கவலைக்கிடம்
சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, சிறுவன் நாயைப் போன்று குரைப்பதும், ஊளையிடுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெறிபிடித்த நாய் கடிப்பதற்கு உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் மனிதனின் செயல்பாடுகள் நாயைப் போலவே மாறுவதற்கான ஆபத்துகள் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.