இயர்போன்கள் பயன்பாடு: இதயம், மூளை பாதிக்கப்படும் அபாயம் - அதிர்ச்சி தகவல்!
தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்.
இயர்போன்கள்
நம்மில் பலரும் ஹெட்போன் அல்லது இயர்போனை நாள்தோறும் பயன்படுத்தி வருகிறோம். இதனை இருசக்கர வாகனம், பஸ், ரயில் பயணங்களின்போது பலரும் பயன்படுத்துவதை காண முடிகிறது.
இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் தொடர்ந்து உரத்த இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இந்த ஒலியலைகள் தொடர்ந்து செவிப் பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பதால் காதுகள் மட்டுமின்றி இதயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன் படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.
நோய்த்தொற்றுகள்
மேலும், இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மேலும், நேரடியாக இயர்போன்களை காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையை தடுக்கிறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சி உட்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
அதேபோல் இயர்போன்கள் மூலம் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.