இரவு லேட்டா சாப்பிடுபவர்களா நீங்கள்..? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!

Jiyath
in ஆரோக்கியம்Report this article
இரவில் தாமதமாக சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரவு உணவு
நம்மில் பலர் சாப்பிட கூட நேரம் இல்லாமல் பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம். அந்த நேரத்தில் பசியை போக்கிக் கொள்ள கிடைத்ததை சாப்பிடுகிறோம். இது நம் உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
பலர் இரவு உணவை தாமதாமாக சாப்பிடுகின்றனர். இப்படி தாமதமாக சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் தாமதமாக சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பக்கவாதம்
தினமும் இதேபோல் தாமதாக சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். அதேபோல் இரவில் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டாலும் ஆபத்து தான்.
இதனால் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளில் மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்குவதும் பக்கவாதத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.