சுகர் இருக்குறவங்க மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிடவே கூடாது - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
சில பழங்களை சாப்பிட்ட உடன் நம் ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்.
சர்க்கரை அளவு
அனைத்து பழங்களும் சத்து மிகுந்தவை மற்றும் ஆரோக்கியமானவை தான் என்றாலும் கூட, சில பழங்களில் மிகுதியான சர்க்கரை சத்து உள்ளது.
அதன் வரிசையில், வாழைப்பழத்தில் சர்க்கரை சத்து மிக மிக அதிகம். ஒன்றிரண்டு பழங்களுக்கு மேல் மிகுதியாக சாப்பிட்டால் நம் ரத்த சர்க்கரை அளவு உறுதியாக அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்
வெயிலுக்கு குளுகுளுவென்று இருக்க நாம் அருந்துகின்ற ஒரு கப் திராட்சை ஜூஸில் மாவு சத்து மற்றும் சர்க்கரை சத்து மிகுதியாக இருக்கும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
ஆரஞ்சு னிப்பு மற்றும் புளிப்பு ஆகிய சுவைகள் ஒரு சேர கலந்த இந்த பழத்தில் கலோரி சத்துக்கள் மிக அதிகமாக இருக்கிறதாம். இதனால் நம் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
ஒரு சிறிய துண்டு மாம்பழத்தில் 15 கிராமுக்கு மிகுதியாக சர்க்கரை சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை ஏதோ ஆசைக்கு ஒன்று என சாப்பிட்டாலும் கூட ஆபத்து தான்.
அன்னாசி பழத்தில் நம் ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் வகையில் கலோரிகள் மற்றும் மாவு சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. எனவே இத்தகைய பழங்களை டசர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.