சுகர் இருக்கிறவங்க பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? எந்த அளவு எடுத்துக் கொள்ளலாம் போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
பேரிச்சம் பழம்
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோன்று கார்போஹைட்ரேட், மாவுப்பொருள்கள் நிறைந்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.
மேலும், குறிப்பாக இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் கொண்ட உணவுப் பொருள்களை அதிகமாக எடுத்துக் கொள்வதுண்டு. இரும்புச் சத்து கொண்ட உணவுப்பொருள் என்று சொன்னாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது முருங்கைக் கீரையை அடுத்ததாக இருப்பது பேரிச்சம் பழம் தான்.
சாப்பிடலாமா?
ஆனால், அதிக ஊட்டச்சத்துக்கள் பேரிச்சை பழத்தில் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுவதுண்டு. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2-3 பேரிச்சை பழங்கள் சாப்பிடுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது.
மற்ற நட்ஸ்களுடன் சேர்த்து பேரிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளும்போது பெரிய சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது.