என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறியவகை நோயால் பாதித்த நபர்!

Belgium
By Swetha Apr 24, 2024 09:32 AM GMT
Report

உடலில் தானாக மதுபான சுரக்கும் அறிய வகை நோயால் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

சுரக்கும் மதுபானம்

பெல்ஜியத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பள்ளி ஆசிரியராக பணியாற்றும் அவர் மீது போதையில் வாகனம் ஒட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறியவகை நோயால் பாதித்த நபர்! | Mans Body Automaticallly Secrete Alcohol

இந்நிலையில் அந்த நபரை விசாரித்ததில் அவருக்கு உடலில் தானாக மதுபான சுரக்கும் auto brewery syndrome (ABS) என்ற அரியவகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அது நபரை மூன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவர்கள் - மிரண்டு போன அரசு பள்ளி நிர்வாகம்!

வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவர்கள் - மிரண்டு போன அரசு பள்ளி நிர்வாகம்!

அறியவகை நோய்

இது குறித்து பெல்ஜிய மருத்துவமனை மருத்துவர் பேசுகையில், இதுபோன்ற அரியவகை நோயால் பாதிக்கப்ட்டுள்ளவர்களின் உடலில் தானாக மதுபான சுரக்கும். ஆனால் இதன் விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவே உணர்வார்கள்.

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறியவகை நோயால் பாதித்த நபர்! | Mans Body Automaticallly Secrete Alcohol

ஏபிஎஸ் என்ற நோய் பிறக்கும்போதே வரக்கூடியவை அல்ல, குடல் தொடர்பான பாதிப்பில் அவதிப்படும்போது இதுபோன்ற அரியவகை நோய் உருவாகுகிறது. இந்த நோயானது வயிற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை புளிக்க வைத்து, ரத்தத்தில் எத்தனால் அளவை அதிகரித்து, போதையின் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்காக அந்த நபர் ஆஜரானார். வினோத நோய் காரணமாக Drink and Drive குற்றச்சாட்டப்பட்ட அவருக்கு எந்தவித போதை அறிகுறிகள் இல்லை என்று வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தனர். இதனால் அந்த நபரை நீதிமன்றம் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.