வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவர்கள் - மிரண்டு போன அரசு பள்ளி நிர்வாகம்!
பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள்
சேலம், தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.வழக்கம் போல் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர தொடங்கினர்.
அப்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் ஐந்து மாணவர்கள் மது பாட்டில்களை வாங்கி வந்து பள்ளி வகுப்பறையில் மது அருந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பள்ளி வகுப்பறைக்கு வந்த மாணவ மாணவிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் மது
உடனே தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும் வகுப்பறையில் மது அருந்திய ஐந்து மாணவர்களையும் அழைத்து கண்டித்துள்ளனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களிடன் இனி இவ்வாறு தவறு நடக்காது என எழுத்துப்போர்வமாக எழுதி வாங்கி மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மது அருந்திய மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
மற்ற மாணவர்களுக்கு இது ஒரு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.