வகுப்பறையில் மதுபோதையில் பாடம் நடத்திய பெண் ஆசிரியை
கர்நாடகாவில் பெண் ஆசிரியர் ஒருவர் மது போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்திய பெண் ஆசிரியை
கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கங்கா லெட்சுமால். இவர் மதுப்பிரியர் என்றும் மதுவுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.
பள்ளிக்கு மது பாட்டிலுடன் வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மது அருந்திய பெண் ஆசிரியரை கண்டித்துள்ளனர்.
காதில் வாங்காத பெண் ஆசிரியர் கங்கா லெட்சுமால் தொடர்ந்து மது அருந்தி விட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து கங்கா லெட்சுமால் மீது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசாருடன் வந்த அதிகாரிகள் பெண் ஆசிரியர் கங்கா லெட்சுமாலிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரின் அறைக்கு சென்று சோதனை செய்த போது மேசையில் பெட்டியில் மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆசிரியை கங்கா லெட்சுமாலை பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்