எங்கப்பா மேல சட்டைய காணோம் : ஜி-7 மாநாட்டில் புதினை கேலி செய்த தலைவர்கள்

Boris Johnson Vladimir Putin
By Irumporai Jun 27, 2022 10:44 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.

தொடங்கிய ஜி7 மாநாடு

இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. குறிப்பாக உக்ரைன் ரஷ்யா மீதான போர் குறித்து விவாதிக்கப்பட்டது, இதில் 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவாக கூறினார். இந்த மாநாட்டுக்கு முன் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினர்.

putin

அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் படத்தைப் பார்த்து அவர்கள் கேலி செய்தனர். ரஷ்ய அதிபர் புதின் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார்.


புதினை கிண்டல் செய்த உலகத்தலைவர்கள்

அவர் பலமான மனிதர் என்பதை காட்டுவதற்காக அவருடைய இது போன்ற புகைப்படங்கள் ரஷிய அதிபர் மாளிகையால் அடிக்கடி வெளியிடப்படும், தற்போது புதின் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த பின், ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் புதினைப் பற்றி கேலி செய்தனர்.

putin

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்ற தலைவர்களை நோக்கி, "நாம் அனைவரும் புதினை விட உறுதியானவர்கள் என்பதை காட்ட வேண்டும். அதற்காக நம்முடைய ஜாக்கெட்டுகளை அவிழ்க்க வேண்டுமா..?" என்று கிண்டல் செய்தார் 

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த வயதான தம்பதிகள் : கடற்கரையில் மயங்கியதால் பரபரப்பு