இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த வயதான தம்பதிகள் : கடற்கரையில் மயங்கியதால் பரபரப்பு
இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் வந்த வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெருக்கடியில் இலங்கை
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் அங்கு உள்ள தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வரும் நிலை அதிகரித்து வருகிறது.
தமிழகம் வந்தவர்கள் மயக்கம்
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்து உள்ளனர். இந்த நிலையில் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வைத்தியர்கள் உட்பட வெளிநாடு சென்றோருக்கு ஏற்பட்ட சிக்கல்! இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை