மாணவிக்கு நிர்வாணமாக வீடியோ கால் செய்த முன்னாள் பாஜக பிரமுகர் - ஷாக் ஆன மாணவி

BJP Tamil Nadu Police
By Thahir Jun 12, 2022 08:18 AM GMT
Report

தனது கல்லுாரி மாணவிக்கு நிர்வாணமாக வீடியோ கால் செய்த முன்னாள் பாஜக நிர்வாகியும்,கல்லுாரி சேர்மனுமான தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனியார் கல்லுாரி 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் அரசு நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

மாணவிக்கு நிர்வாணமாக வீடியோ கால் செய்த முன்னாள் பாஜக பிரமுகர் - ஷாக் ஆன மாணவி | Former Bjp Leader Made Nude Video Call To Student

கடந்த 2017 ஆம் ஆண்டு தீ தடுப்பு உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றவில்லை என கூறி கல்லுாரிக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அதே ஆண்டில் அக்கல்லுாரி உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தெற்கு தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில் கல்லுாரியை தொடங்கியுள்ளது.

நிர்வாண வீடியோ 

இக்கல்லுாரியின் சேர்மனாக இருக்கும் தாஸ்வின் ஜான் கிரேஸ் இவர் முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர்) கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லுாரியில் சேர்ந்த மாணவியிடம் வீடியோ காலில் தவறான முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோ காட்சிகள் கல்லுாரியில் பயிலும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லுாரியின் நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.இதையடுத்த கல்லுாரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார்.

சாலை மறியல்

கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்லூரி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் திரும்பி தர வலியுறுத்தி திடீரென பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவ,மாணவிகள்,பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்ட மாணவ,மாணவிகளிடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் மற்றும் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பபட்டது.

வழக்குப்பதிவு 

மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்,ஆபாசமாக குறுச்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தப்படுத்தினர் .

வருகிற 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

விரைவில் இந்து மக்கள் கட்சியில் சீமான் - அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி!