தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது - மாணவ, மாணவிகள் உற்சாகம்

Governor of Tamil Nadu
By Petchi Avudaiappan May 10, 2022 04:51 AM GMT
Report

தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். 

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. 

ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 5 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்கின. ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட அளவு கால இடைவெளி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று  தொடங்கியது.மே 31 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் நடைபெறுகிறது. பொதுத்தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening