புயல் நிவாரணம் ரூ.6,000: டோக்கன் பெற முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் உதயநிதி தகவல்!
நிவாரண தொகை டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிவாரண தொகை
சென்னையில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நிவாரண தொகை வழங்கும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.
உதவி மையங்கள்
முதற்கட்டமாக டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிவாரண தொகை டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது "டோக்கன் பெறாதவர்களுக்கு உதவ ரேஷன் கடை அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களில் விண்ணப்பம் அளித்தால் ஒரு வாரத்தில் நிவாரண தொகை வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.