மிக்ஜாம் புயல் பாதிப்பு: சென்னை மக்களுக்கு இலவச முகாம் - விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

Vijay Tamil nadu Chennai Thalapathy Vijay Makkal Iyakkham Michaung Cyclone
By Jiyath Dec 12, 2023 11:29 AM GMT
Report

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், வரும் டிசம்பர் 14ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை 25 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு: சென்னை மக்களுக்கு இலவச முகாம் - விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு! | Free Medical Camp At Chennai Vijay Makkal Iyakkam

இதனை அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மிக்ஜாம்‌ புயல்‌ மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின்‌ நலனைப் பாதுகாக்கும்‌ வகையிலும்‌, காய்ச்சல்‌ உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும்‌ நோக்கிலும் தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது.

மருத்துவ முகாம் 

இம்முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல்‌ மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென்‌ சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில்‌,

மிக்ஜாம் புயல் பாதிப்பு: சென்னை மக்களுக்கு இலவச முகாம் - விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு! | Free Medical Camp At Chennai Vijay Makkal Iyakkam

பல்துறை மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள்‌ வழியாக குழந்தைகள்‌, பெண்கள்‌, முதியோர்களுக்கு நோய்‌ தடுப்பு மருந்துகள்‌, மாத்திரைகள்‌ மற்றும்‌ உரிய ஆலோசனைகள்‌ வழங்கப்பட உள்ளன.

பொதுமக்களின்‌ நலன்‌ காக்கும்‌ இம்மருத்துவ முகாம்களில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு பயன்படுத்தக்‌ கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.