மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

Tamil nadu Chennai
By Jiyath Dec 18, 2023 07:27 AM GMT
Report

சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பயணம்

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு! | Date Of Free Bus Travel Tokens For Senior Citizens

2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அடுத்த அரையாண்டிற்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பே.நி, மத்திய பணிமனை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பிராட்வே உள்ளிட்ட 40 மையங்களில் வரும் 21.12.2023 முதல் 31.01.2024 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.

உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்!

உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்!

என்னென்ன ஆவணங்கள்?

அதன் பின்னர், 01.02.2024 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை கொண்டு வர வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு! | Date Of Free Bus Travel Tokens For Senior Citizens

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்பொழுது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய வண்ண பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?