உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்!

M K Stalin Tamil nadu DMK Chennai Thangam Thennarasu
By Jiyath Dec 17, 2023 02:56 AM GMT
Report

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான புதிய விண்ணப்பம் வரும் ஜனவரிக்கு பிறகு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

உரிமைத் தொகை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழக்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை, கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்! | Womens Entitlement Amount New Applications

இத்திட்டத்தில் முதற் கட்டமாக தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு கடந்த 10ம் தேதி இரண்டாவது கட்டமாக 7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

அமைச்சர் தகவல் 

மேலும், இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக கடந்த அக்டோபர் 25ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்! | Womens Entitlement Amount New Applications

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான புதிய விண்ணப்பம் வரும் ஜனவரிக்கு பிறகு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் பயன்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?