அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு!
சென்னை வானகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இடைக்கால பொதுச்செயலாளர்
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் படி பொதுகுழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தீர்மானம்
பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் வரை நீடிப்பார்கள் என்றும், அதிமுகவின் நிரந்திரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யபடுகிறது என்றும்,
4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஒருங்கிணைபாளர், துணை ஒருங்கிணைபாளர் பதவிகள் ரத்து செய்யப்படுவதாகவும், துணை பொதுச்செயலாளர் பொறுப்பை தேர்வு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விதிகளில் மாற்றம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் விதிகளில் மாற்றம் செய்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதிமுக பொதுகுழுவிற்கு தடையில்லை... ஓபிஎஸ்க்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!