நீதிமன்றம் மூலம் தான் நினைத்ததை சாதிக்க முயற்சிக்கிறார் ஓபிஎஸ் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை இல்லை என்று நீதிமன்றம் ஓபிஎஸ் கொடுத்த தடைக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஓபிஎஸ் கோரிக்கை
பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்வு வழங்கி உள்ளது. கட்சி உள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
காலை 9.15க்கு பொதுக்குழு நடைபெற இருந்த நிலையில் 9 மணிக்கு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது நீதிமன்றம். இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி, ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும்,
நீதிமன்றம் தலையிட முடியாது
பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டார்.
அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும்,
மனு தள்ளுபடி
விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் ஒருங்கினைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சமாதானம் செய்து,
கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து, ஒவ்வொர்ரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார் ஓபிஎஸ். நீதிமன்றத்தின் மூலமாக, தான் நினைத்ததை சாதிக்க முயற்சிக்கிறார் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்று வரும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
அதில் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம்.
பொதுக்குழுவில் ஓபிஎஸ் தனி இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் பங்கேற்கவில்லை. பொதுக்குழு நடைபெற்று வரும் சமயத்தில் அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.
அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லும் ஈபிஎஸ்..