இன்றுவரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் : ஓ.பன்னீர்செல்வம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்தார் அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோரினார்.
திரெளபதி முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடந்த நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்தனர்.
ஆதரவு கொடுத ஈபிஎஸ்
சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி :
குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவை அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
இப்பவும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் தனியாக திரெளபதி முர்முவை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுகவும் தானும் ஆதரவு அளிப்பதாகவும் .
அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.