திருமணமா..ஆவணப்படமா..நயன்தாரா விக்னேஷ் ஜோடி திருமணத்தை இயக்கும் பிரபல இயக்குநர்..!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த நிலையில் அதை பிரபல இயக்குநர் ஆவணப்படமாக எடுக்க உள்ளார்.
நயன்தாரா திருமணம்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரானா நயன்தாரா பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார்.
இவர்களின் திருமணம் வருகிற ஜுன் மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட நயன்தாரா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவரின் திருமணத்திற்கு ரஜினி,அஜித்,விஜய்,சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர்.
ஆவணப்படம்
இவர்களின் திருமணத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்களின் திருமணத்தை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆவணப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா திருமணம் ஓடிடி-யில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்..!