நடிகர் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணம் - நிச்சயதார்தம் எப்போது?

Thahir
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் 17 வயதில் ஹீரோவாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த்.
பிரபல இயக்குனரும்,நடிகருமான தியாகராஜனின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் வலம் வந்தார். இவருக்கு 2005ம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற நீதிமன்றம் சென்றார் பிரசாந்த். காரணம் 1998ம் ஆண்டே கிரஹலட்சுமிக்கு வேணு கோபால் என்பவருடன் திருமணம் நடத்திருப்பதை மறைத்துள்ளார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு படங்களை நடிப்பதை குறைத்துக்கொண்ட பிரசாந்த் கடந்த சில வருடங்களாக தான் நடிக்க தொடங்கியுள்ளார்.
பிரசாந்த் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நிச்சயதார்த்தம் என்கின்றனர், ஆனால் பெண் யார், எப்போது திருமணம் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.