மனைவியை 70 துண்டுகளாக வெட்டி நகரெல்லாம் வீசிய ஐடி ஊழியரின் வெறிச்செயல்!

Attempted Murder Delhi Sexual harassment India
1 மாதம் முன்

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கொலை 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய ஐடி என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

 ஐடி என்ஜினீயர்

டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு ஐடி என்ஜினீயர் . இவர் தனது காதலி அனுபமா குலாட்டி என்பவரை 1999 இல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

மனைவியை 70 துண்டுகளாக வெட்டி நகரெல்லாம் வீசிய ஐடி ஊழியரின் வெறிச்செயல்! | Delhi Techie Chopped His Wife Into70 Pieces

கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். நாடு திரும்பியது ராஜேஷ் கொல்கத்தாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே தொடர்ந்து தகராறு நீடித்து வந்தது.

கள்ளக்காதல் விவகாரம் 

அனுபமா அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக அவரது கணவர் சந்தேகித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் தகராறு அதிகரித்து கொண்டே வந்தது.

மனைவியை 70 துண்டுகளாக வெட்டி நகரெல்லாம் வீசிய ஐடி ஊழியரின் வெறிச்செயல்! | Delhi Techie Chopped His Wife Into70 Pieces

ராஜேஷ் தன்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக அனுபமா போலீசில் புகார் அளித்தார். மேலும் மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 தகராறு

இதனால் மனைவியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ராஜேஷ் மனைவியை கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதில் அனுபமா மயக்கம் அடைந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்தார்.

ஆனால் அவர் மரணமடையவில்லை மயக்கம்தான் அடைந்தார் என்பதை அறிந்ததும் அவரை கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். உடனடியாக அவரது மூக்கு மற்றும் வாயில் பஞ்சை திணித்து உள்ளார். இதில் மூச்சு திணறி சிறிது நேரத்தில் அனுபமா உயிரிழந்தார்.

 70 துண்டுகளாக வெட்டி

ராஜேஷ் மனைவியின் உடலை எங்கே மறைத்து வைப்பது என தெரியாமல் திணறி உள்ளார். பின்னர் மனைவியின் உடலை 70 துண்டுகளாக வெட்டி அதனை பாலிதீன் பேக்குகளில் அடைத்து 2 மாதமாக நகரின் பல பகுதியிகளில் வீசி உள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகள் தயார் குறித்து கேட்டதும் ராஜேஷ் பலவேறு பொய்களை கூறி சமாளித்து உள்ளார். அனுபமாவின் சகோதரர் சுஜன்குமார் இதுகுறித்து டேராடூன் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் ராஜேஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணை

சந்தேகத்தின் பேரில் போலீசார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். அதைத் திறந்தவுடன், உள்ளே இருந்து கருப்பு பாலிபேக்கில் துண்டிக்கப்பட்ட கைகால்களும், மனித உடல் உறுப்புகளும் இருந்து உள்ளது.

அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். உள்ளூர் கடையில் கல் வெட்டும் கிரைண்டர் இயந்திரம், டீப் ஃபிரீசர் மற்றும் கருப்பு பாலிபேக்குகள் வாங்கப்பட்டதாக ராஜேஷ் கூறினார்.

ஆயுள் தண்டனை

போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டேராடூன் நீதிமன்றத்தால் ராஜேசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  

வலியில்லா பிரசவம் - ப்ரத்யேக ஏற்பாடு.. சிரிப்பு வாயுவை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.