கணவன் கண்முன்னே மனைவி செய்த செயல் - ஆத்திரத்தில் நடந்த கொலை

Attempted Murder
By Petchi Avudaiappan Apr 23, 2022 04:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் ஆத்திரத்தில் மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கண்ணகி நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநனராக உள்ள புகழ்கோடி  என்பவர்  டில்லி சரிதா என்ற இளம் பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்த இருவரும் அதே பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இதனிடையே சமீபகாலமாக சரிதா வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதை அறிந்த புகழ்கோடி பலமுறை அவரை எச்சரித்துள்ளார். இதில் ஒருமுறை சரிதா அவருடைய ஆண் நண்பரிடம் பேசுவதை செல்போனில் தானாக ரெக்கார்ட் ஆகும்படி செய்து ஆதாரத்துடன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் இனி நான் பேச மாட்டேன் என்று கூறிய சரிதா சில நாட்களிலேயே மீண்டும் தொடர்ந்து அவருடைய ஆண் நண்பரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கணவன் உறங்கிவிட்டதாக நினைத்துக் கொண்ட சரிதா செல்போனில் அவரது ஆண் நண்பருடன் போர்வையை மூடி போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த கணவன் புகழ்கோடி ஆத்திரமடைந்து மனைவியை சரமாரி அடித்துள்ளார். கண்மூடித்தனமாக அடித்ததில்  காலையில் எழுந்து பார்த்தபோது சரிதா சுயநினைவை இழந்து இருந்ததால் அவரை கண்ணகி நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சரிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு புகழ்கோடி அழைத்து சென்றுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சரிதா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து புகழ்கோடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் காதல்  மனைவி  வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை கண்டித்தும் அவர் தொடர்பை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்து அடித்தேன் என்று புகழ்கோடி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.