சிறுவனை விழுங்கிய முதலை.. வயிற்றை கிழித்து மீட்கும் வரை விடமாட்டோம் - மக்கள் மறியல்!

Viral Video India Madhya Pradesh
By Sumathi Jul 13, 2022 04:58 AM GMT
Report

 சிறுவனை உயிருடன் முழுங்கியதாக கூறி ராட்சத முதலையை இழுத்துவந்து உடலை கிழிக்க முயன்ற கிராம வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ராட்சத முதலை 

மத்தியப் பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தில அந்தர் சிங் என்ற 7 வயது சிறுவன் சம்பல் ஆற்றில் குளிக்க சென்றான். வெகு நேரமாகியும் அவன் கரைக்கு திரும்பவில்லை.

சிறுவனை விழுங்கிய முதலை.. வயிற்றை கிழித்து மீட்கும் வரை விடமாட்டோம் - மக்கள் மறியல்! | Crocodile Swallows Boy In Madhya Pradesh

அந்தர் சிங்கை ராட்சத முதலை விழுங்கியதாக கிராமத்தினர் முதலை ஒன்றை ஆற்றிலிருந்து பிடித்து கரையில் கொண்டு வந்து போட்டு அதன் வயிற்றைக் கிழித்து பையனை உயிருடன் மீட்க வேண்டும் என்று முயற்சித்தனர்.

சிறுவனை விழுங்கிய முதலை

அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதலை சிறுவனை விழுங்கி இருக்காது என கூறினர். இருந்தாலும் கோபமடைந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் முதலை விழுங்கியதாகக் கருதப்படும் அந்தர் சிங்கின்


பெற்றோரும் முதலையை கிழித்து பையனை மீட்க வேண்டும் என்றும் பையன் உயிருடன் இருப்பான் என்று நம்பினர். முதலைவாயில் பெரிய பிரம்பு கம்பு ஒன்றை சொருகியுள்ளனர். அதனால் பையனை முதலை கடித்துத் தின்னாமல் இருக்கும் என கிராமத்தினர் எண்ணினர்.

கிராமத்தினர் மறியல்

மேலும் அவர்கள் அந்தர் சிங்கின் பெயரைச் சொல்லி அழைத்தனர். இதற்கிடையில் சம்பல் நதியின் ஆழமான பகுதிக்கு 7வயது சிறுவன் நீந்தச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் கிராமத்தினரோ முதலையை கிழிக்கும் வரை அதை விட மாட்டோம் என்று சிறைப்பிடித்து வைத்தனர். நதியில் தேடச்சென்ற குழுவும் இன்று காலை வரை பையன் கிடைக்காததால் தேடலையும் நிறுத்தி விட்டனர்.

சிறுவன் கதி?

கிராமத்தினர் முதலைகள் மனிதனை உண்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பல் ஆற்றில் நிறைய முதலைகள் இருப்பதாகவும் புகார் அளித்தனர்.

சில கிராமத்தினர் பையனை முதலை விழுங்கியதை நேரில் கண்டதாகவும் கடைசியில் ஒருவழியாக போலீசார் முதலையைக் கிழிக்காமல் கிராமத்தினரிடமிருந்து முதலையை மீட்டனர்.

’கிம்’ போல மாறனும்.. 4 கோடி செலவு பண்ணி 40 தடவ ஆபரேஷன் - வசமாக மாட்டிய பெண்!