முகத்தில் 118 தையல்.. பாலியல் வன்கொடுமையை தடுத்த பெண் மீது கொடூர தாக்குதல்!
பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்ட மூன்று பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அவர்களை தடுத்த நிறுத்த அப்பெண் முயற்சித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மத்தியப் பிரதேசம் போபாலில் ஒரு பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளது.
அப்போது, பேப்பர் கட்டரை கொண்டு அப்பெண்ணை அவர்கள் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் துணிச்சல்
அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறையினர், டிடி நகர் ரோஷன்புராவில் உள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு கணவருடன் அப்பெண் சென்றுள்ளார்.
அப்போது, பைக் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கணவர் ஹோட்டலுக்குள் இருந்தபோது, அவர்கள் ஆபாசமான கருத்துக்களை கூறி பெண்ணை நோக்கி விசில் அடித்துள்ளனர்.
அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் மூன்று ஆண்களில் ஒருவரை அறைந்தார். பின்னர், ஹோட்டலுக்குள் அந்த பெண் சென்றுள்ளார்.
அந்த தம்பதியினர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது, சண்டை போட்டதற்காக பெண் மீது கோபமடைந்த குற்றவாளிகள், பேப்பர் கட்டர் மூலம் அவரைத் தாக்கினர்.
பின்னர், பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பலத்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இரண்டு குற்றவாளிகளான பாட்ஷா பெக் மற்றும் அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது.
ஹோட்டலில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி சவுகான் அவருக்கு 1 லட்சம் ரூபாயை வழங்கினார்.