’கிம்’ போல மாறனும்.. 4 கோடி செலவு பண்ணி 40 தடவ ஆபரேஷன் - வசமாக மாட்டிய பெண்!
கிம் அழகால் கவரப்பட்ட பெண் ஒருவர் அவரைப்போலவே மாற கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்து தன்னுடைய மொத்த உருவத்தையே மாற்றியுள்ளார்.
மாடல் கிம்
உலக அளவில் பிரபலமான மாடல் கிம் கர்தாஷியனை இன்ஸ்டாவில் பின் தொடர்வோர் மட்டும் சுமார் 32 கோடிக்கும் அதிகம் ஆகும். இவரது உடை மற்றும் உடலமைப்பு உள்ளிட்ட பலவற்றை ரசிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான ஜெனிபர் என்பவர், கிம் கர்தாஷியனை போல, மொத்தமாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
மாடல் ஜெனிபர்
இதற்காக, தனது 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை செய்து வந்த ஜெனிபர், அடுத்த 12 வருடங்களில், சுமார் 40 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக, மொத்தம் ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி மாறிக் கொண்டிருப்பது தனக்கு சரி ஆகாது என்று முடிவு செய்த ஜெனிபர், மீண்டும் தன்னுடைய பழைய உருவத்திற்கே வர வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அங்கீகாரம்
இதுகுறித்து பேசும் ஜெனிஃபர், "பலரும் என்னை கிம் கர்தாஷியன் என்றே அழைத்து வந்தது, எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் ஊட்டத் தொடங்கியது.
நான் மாடலாக இருந்து, தற்போது பிசினஸ் செய்து வருகிறேன். இப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நிறைய விஷயங்களை சாதித்து விட்டேன். ஆனாலும், நான் கர்தாஷியனை போல இருப்பதால் தான், பலரும் எனக்கான அங்கீகாரத்தை தருகிறார்கள்.
அறுவை சிகிச்சை
நான் உண்மையில் யார் என்பதே காணாமல் போய்விட்டது. அறுவை சிகிச்சை செய்து செய்து, அதற்கு நான் அடிமையாகி விட்டேன் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.
இதனால் மீண்டும் என்னுடைய பழைய உடலையும் தோற்றத்தையும் பெற வேண்டும் என நான் நினைத்தேன்" என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஜெனிஃபருக்கு தன்னுடைய உடல் தோற்றத்தை நினைத்து
ஆவண படம்
ஒருவித எரிச்சல் ஏற்படும் நோய் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், தனது பழைய தோற்றத்திற்கு மாறுவதற்காக, மருத்துவர் ஒருவரை தேடிப் பிடித்துள்ள ஜெனிஃபர்,
இதற்காக தற்போது சுமார் 95 லட்சம் ரூபாய் செலவு செய்து தன்னுடைய பல உருவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறார்.நான் நானாக இருப்பது தான் அழகு என தெரிவிக்கும் ஜெனிபர், அழகுக்கு அடிமையாவது குறித்த ஆவண படத்தையும் எடுத்து இயக்கி வருகிறார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோட்டம்!