இரவில் தூங்கும் போது செல்போனை அருகில் வைத்து தூங்குகிறீர்களா ? உங்களுக்கான அலெர்ட்!
இரவில் தூங்கும் போது செல்போனை தலைக்கு அருகில் வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த பழக்கத்தை உடனே தவிர்க்க வேண்டும் என்று பல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
செல்போனை
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாதாக உள்ளது. நம்மில் பலர் தூங்கும் போது செல்போன் பார்த்து விட்டு அருகில் வைத்துவிட்டு தூங்கும் பழக்கம் உள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் கண்டுகொள்வதில்லை.
ஆனால் இந்த பழக்கத்தை உடனே தவிர்க்க வேண்டும் என்று பல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.செல்போனில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு உங்கள் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி, அதன் நீண்ட கால விளைவுதான் Brain Tumor சொல்லப்படுகிறது.
மார்புக்கு அருகில் வைத்திருக்கும்போது இதே கதிர்வீச்சு உங்களது இதயத்தையும் தாக்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் செல்போனை இரவு தூங்குவதற்கு முன்பு பயன்படுத்திவிட்டு அப்படியே அருகில் வைத்துத் தூங்கிவிடுகிறோம்.
தவிர்க்க வேண்டும்
முடிந்தவரை செல்போன் அல்லது டிவி பார்த்து முடித்து, ஒரு மணிநேரத்திற்குப் பிறகு நீங்கள் தூங்க செல்வது நல்லது. ஆனால் செல்போனை பார்த்துவிட்டு, அப்படியே தூங்கும்போது நம்முடைய கண்களில் உள்ள மெலடோனின் அளவை பாதிக்கிறது. இது கண் பார்வையை மோசமடைய செய்யும்.
மேலும், மெலடோனின் அளவு (Melatonin levels) குறைவதால் தூங்குவதில் சிரமம், உடலில் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களின் அருகில் மொபைல் போன் வைத்து தூங்குவது அவர்களின் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்கிறது.
செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, கர்ப்பிணிகளுக்குப் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் தரும். இது குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.