உறவினருக்காக சீட்டில் இருந்த பெண்ணை எழவைத்த போலீஸ்காரர் - குவியும் கண்டனங்கள்..!
புதுச்சேரியில் அரசு பேருந்தில் தன் உறவினர் அமர்வதற்க சீட்டில் ஏற்கனவே அமர்ந்திருந்த பெண்ணை எழ வைத்த போலீகாரர் ஒருவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிகாரம் காட்டிய போலீஸ்காரர்
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அரசு குளிர்சாதன பேருந்தில் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் தனது உறவினருக்காக இருக்கையை விட்டு வலுக்கட்டாயமாக எழ வைத்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லவிருந்த அரசு குளிர்சாதன பேருந்தில் பெண் ஒருவர் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அம்மாநில போலீகாரர் ஒருவர் தன் உறவினருக்காக பேருந்தில்அமர்ந்திருந்த பெண்ணை எழ செய்து உள்ளார்.
வாக்குவாதம்
இதனை அப்பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை பார்த்த அந்த போலீஸ்காரர் இளைஞரின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார்.மேலும் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ்காரருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவரு சொந்தக்காரங்களுக்கு சீட் விடுவதற்கு புதுச்சேரி ASI அப்பா வீட்டு பஸ்ஸா இது? @sumanthraman pic.twitter.com/J7kVPVR4X6
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) June 14, 2022
மேலும் பெண்,மற்றும் அவரின் கணவர்,இளைஞர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் சமரசம் செய்து மூவரையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகள் போட்ட அதிசய கோழி - மக்கள் ஆச்சரியம்