கேரளாவில் 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகள் போட்ட அதிசய கோழி - மக்கள் ஆச்சரியம்

By Nandhini Jun 14, 2022 06:35 AM GMT
Report

கிராம மக்கள் கேரளா மாநிலம், ஆலப்புழா, புன்னம்புறாவை சேர்ந்தவர் பிஜூ. இவர் சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கோழிப்பண்ணையில் ஏராளமான கலப்பின கோழிகளை வளர்த்து வருகிறார்.

24 முட்டையிட்ட அதிசய கோழி

இந்நிலையில், நேற்று காலை பண்ணையில் உள்ள கோழிகளை பிஜூ பார்வையிட்டார். அப்போது, பண்ணையில் ஒரு கோழி மட்டும் வித்தியாசமாக மண்ணை நோண்டிக் கொண்டிருந்தது. அந்த கோழிக்கு அருகில் சென்றார் பிஜூ, அந்த கோழி காலை 8.30 மணிக்கு முதல் முட்டையிட்டது. பின்னர், சிறிது நேரத்திற்குள் மீண்டும் முட்டையிட்டுக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த பிஜூ ஆச்சரியமடைந்தார்.

காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12.30 வரை அந்த கோழி சுமார் 6 மணி நேரத்திற்குள் மொத்தம் 24 முட்டைகள் போட்டது. பின்னர், அக்கோழி முட்டை போடுவதை நிறுத்தியது.

கேரளாவில் 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகள் போட்ட அதிசய கோழி - மக்கள் ஆச்சரியம் | Wonder Chicken Laying 24 Eggs

அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து பிஜூ கால்நடை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ அந்த கோழிப்பண்ணைக்கு சென்றார். அந்த 24 முட்டைகளையும், கோழியையும் ஆய்வு செய்தார்.

பின்பு இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில் -

இது அரிதான சம்பவம். கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகதான் தொடர்ந்து முட்டையிட்டிருக்கலாம். கோழியை அறிவியல் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே 24 முட்டை போட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க முடியும் என்றார். இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவத் தொடங்கியது. இத்தகவலை அறிந்த கிராம மக்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு 24 முட்டை போட்ட கோழியை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.