கர்நாடகாவில் முந்திரி வடிவில் முட்டையிட்ட அதிசய கோழி - வைரலாகும் புகைப்படங்கள்
கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் வீட்டில் கோழியை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் முதல் நாள் இக்கோழி ஒரு முட்டையிட்டுள்ளது. அந்த முட்டை முந்திரி வடிவில் இருந்துள்ளது. இதைப் பார்த்ததும் பிரசாந்த் அலட்சியமாக இருந்து விட்டார். 2ம் நாள், 3ம் நாளிலும், இதே மாதிரி முட்டையை அந்த கோழியிட்டுள்ளது.
இந்தக் கோழியிடம் ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது என்று தெரிந்துக் கொண்ட பிரசாந்த், தினமும் கோழி முட்டையைப் பரிசோதித்து வந்துள்ளார். சோதனையில் கோழியிட்ட முட்டைகள் அனைத்தும் முந்திரி வடிவில் இருந்தது தெரியவந்தது.
இத்தகவல் அந்த கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு தெரியவந்தது. பலரும் ஆச்சரியமாக கோழியிட்ட முட்டையை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கோழியிட்ட மாம்பழ வடிவிலான முட்டை இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.