எனக்கு இலங்கை மக்களின் நட்பு வேணும் தங்கச்சி... - ஜனனியிடம் பாசமா பேசிய ஜி.பி.முத்து - வைரலாகும் வீடியோ

Viral Video GP Muthu
By Nandhini Oct 11, 2022 11:41 AM GMT
Report

எனக்கு இலங்கை மக்களின் நட்பு வேணும் தங்கச்சி என்று ஜனனியிடம் பாசமா பேசிய ஜி.பி.முத்து வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

GP muthu

ஜனனியிடம் பேசிய ஜி.பி.முத்து

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இலங்கை பெண்ணாக ஜனனியிடம், தமிழ்நாட்ல எனக்கு எல்லோருடைய நட்பு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் இல்லை. ஆனால், தங்கை ஜனனி மூலமாக எனக்கு இலங்கை மக்களின் நட்பு எனக்கு வேண்டும். எப்போமே இந்த அண்ணன் உன் மேல் பாசமா இருப்பேன் என்று பேசியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜி.பி.முத்துவின் இந்த பேச்சு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.