கவர்ச்சிகள் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 - யார் யாரெல்லாம் தெரியுமா?

Kamal Haasan Bigg Boss
By Sumathi 3 மாதங்கள் முன்

பிக்பாஸ் சீசன் 6 ல் களமிறங்கவுள்ள மேலும் 2 நபர்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ்

கடந்த 2017ல் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்தநிலையில் பல ரசிகர்களை அள்ளிக்குவித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பல ரசிகர் பட்டாளங்கள் ஓவ்வொரு சீசன்காகவும் காத்திருந்து நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்த வண்ணமுள்ளனர்.

கவர்ச்சிகள் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 - யார் யாரெல்லாம் தெரியுமா? | Shilpa Manjunath And Dharsha Gupta In Biggboss

இந்நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் குவிய காரணம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய விதமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களிலும் நிகழ்ச்சியின் முடிவில் வெற்றியாளர்களுக்கு 50 லட்சம் காசோலை வழங்கியுள்ளது.

தர்ஷா குப்தா -  ஷில்பா மஞ்சுநாத்

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாகவும் இந்த சீசனையும் கமலஹாசன்தான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கவர்ச்சிகள் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 - யார் யாரெல்லாம் தெரியுமா? | Shilpa Manjunath And Dharsha Gupta In Biggboss

சீசன் 6 காக பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ள நிலையில் நிகழ்ச்சியில் களமிறங்கவுள்ள போட்டியாளர்கள் தேர்வு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது . ஏற்கனவே ரக்‌ஷன், ராஜலட்சுமி, கார்த்திக் குமார், அஜ்மல், ஸ்ரீநிதி ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் மேலும் 2 நடிகைகள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது.

கவர்ச்சிகள் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 - யார் யாரெல்லாம் தெரியுமா? | Shilpa Manjunath And Dharsha Gupta In Biggboss

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள நடிகைகள் இருவரான தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆர்வத்தோடு சீசன் 6 காக காத்துக்கொண்டுள்ளனர்.