பிக் பாஸ் வீட்டில் நடு இரவில் பயத்தில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்த ஜி.பி.முத்து

Kamal Haasan Bigg Boss GP Muthu
By Thahir 5 மாதங்கள் முன்
Report

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜி.பி முத்து பயத்தில் கதறும் காட்சிகளும், சக போட்டியாளர்கள் பயமுறுத்தும் வீடியோ காட்சிகளும் வேகமாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம் 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று ஞாயிற்று கிழமை தொடங்கியது.

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே,

பிக் பாஸ் வீட்டில் நடு இரவில் பயத்தில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்த ஜி.பி.முத்து | Gp Muthu Fell Down From The Bed Big Boss House

ஐபிசி தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கதறும் ஜி.பி.முத்து 

இந்த நிகழ்ச்சியில் பிரபல டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து கலந்து கொண்டார்.முதல் நாள் போட்டியின் போது நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனை சந்தித்த பின் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக அடி எடுத்து வைத்தார்.

பின்னர், அவர் தான் தனியாக இருப்பது பயமாக இருப்பதாகவும், எனக்கு பயத்தில் சிறுநீர் வந்துவிடும் போல இருக்கு என்று கூறினார்.

அப்போது நடிகர் கமல் ஆதாம், ஏவால் குறித்து கூறவே, ஏது ஆதாம் ஆ... எனக் கூறி கமல்ஹாசனை அலற விட்டார்.

இந்த நிலையத்தில், நேற்று நடந்த எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் நடு இரவில் பயத்தில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்த ஜி.பி.முத்து | Gp Muthu Fell Down From The Bed Big Boss House

நடுஇரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்த ராபர்ட் அவரை சீண்டுகிறார். அப்போது அலறியடித்து எந்திரித்த ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே உருண்டு விழுந்துள்ளார். அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடு இரவில் பயத்தில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்த ஜி.பி.முத்து | Gp Muthu Fell Down From The Bed Big Boss House

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.