Rock Fort நகர் திருச்சியில் எங்க சாப்பிடுறது'னு தெரியலையா? அப்ப இது உங்களுக்கு தான்

Tamil nadu trichy
By Karthick Jun 12, 2024 11:47 AM GMT
Report

தமிழகத்தில் நிலப்பரப்பின் அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமான திருச்சி நகருக்கு வந்து எங்கு சாப்பிடுவது என்று உங்களுக்கு தெரியவில்லையா?  இந்த options உங்களுக்கு தான்.

ஸ்ரீ சங்கீதாஸ்

வெஜ் உணவகமான ஸ்ரீ சங்கீதாஸ் மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவிதமான சைவ உணவுகளை வழங்குகிறது.

Sri Sangeethas Trichy

பாரம்பரியமான தமிழ் சுவை கொண்ட உணவுகளை பரிமாறுவதில் சிறப்பான உணவகமாக திகழும் ஸ்ரீ சங்கீதாஸ், இனிப்பு மற்றும் பான் ஆசிய வகைகளும் வழங்ககுகிறது. அதே நேரத்தில் fruit juice வகைகளும் இங்கு மக்களை கவர தவறுவதில்லை.

DiMoRa

இந்த பட்ஜெட் விரும்பிகளுக்கு சரிவராத ஒரு இடமே.ஆனால், இங்கு வழங்கப்படும் உணவின் சுவைக்கு இடையினை இல்லை சுவைத்தவர்கள் கமெண்ட்.

DiMoRa Trichy

DiMoRa'வில் இந்தியன், சைனீஸ், தந்தூரி மற்றும் இத்தாலியன் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்குகிறது. அதே நேரத்தில் வார விடுமுறைகளில் இங்கு குறைந்த விலையில் மக்களுக்காக buffet முறையில் உணவுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

செல்லம்மாள் மண்பானை சமையல்

திருச்சியில் அமைந்துள்ள அழகான தென்னிந்திய உணவகமான செல்லம்மாள் மண்பானை சமையல் லோக்கல் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற உணவகமாகும்.

Chellamal Mannpanai Samayal Trichy

இந்த உணவகம் தனது பாரம்பரிய சமையல் முறைகளுக்கும், இதமான சூழலுக்கும் பெயர் பெற்றது. வாழை இலையில் உணவு பரிமாறுவதும், மண் பானைகளில் சமைப்பதும் பாரம்பரிய சுவைகளைப் பேணுவதுதான் உணவகத்தின் சிறப்பு.

ஊரும் சோறும் - 1000 கோவில் நகரம் காஞ்சிபுரத்தில் மிஸ் பண்ண கூடாத இடங்கள்!

ஊரும் சோறும் - 1000 கோவில் நகரம் காஞ்சிபுரத்தில் மிஸ் பண்ண கூடாத இடங்கள்!

Apple Millet

ஆப்பிள் மில்லட் ஒரு புதுமையான ஆரோக்கிய உணவு உணவகமாகும், இங்கு தினை அடிப்படையிலான உணவு வகைகளை வழங்கப்படுகிறது.

Apple Millet Trichy

இந்த தனித்துவமான முன்முயற்சியானது தினைகள் மற்றும் தானியங்களின் மறக்கப்பட்ட மதிப்பைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவை திறமையாக இங்கே முழுமையாக சமைக்கப்படுகின்றன. இந்த மெனுவில் தூத்துக்குடி சூப், குதிரைவாலி பொங்கல் மற்றும் சாமை வெந்தய தோசை போன்ற வாயில் நீர் ஊற்றும் விருப்பங்கள் உள்ளன.    

பாம்பே சப்பாத்தி சென்டர்

நீங்கள் சப்பாத்தி விரும்பி சாப்பிடுவீர்களா? சப்பாத்திக்கென ஒரு தனி ஸ்பெஷல் கடை ஒன்றினை நீங்கள் தேடினால் உங்களுக்கான இடம் தான் பாம்பே சப்பாத்தி சென்டர்.

Bombay chapathi Trichy

திருச்சியில் பிரபலமான இங்கு பல வெரைட்டி சப்பாத்திகள் கிடைக்கின்றன. ஆனால் விலை மலிவு தான். ஒவ்வொன்றின் விலையும் இருபது ரூபாய்யை மிகாமல் உள்ளது. சப்பாத்திகளுடன் வறுத்த மிளகாய், ஊறுகாய், ரைத்தா, காய்கறி குழம்பு மற்றும் குருமா போன்ற பலவிதமான சைட் டிஷ்களும் வழங்கப்படுகின்றன.  

Superstar Pizza

நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரா? நீங்கள். உணவு வகைகளில் அதிகமாக பிட்சா சாப்பிட விரும்புவீர்களா? உங்களுக்கென ஒரு தனித்துவமான கடை தான் இந்த சூப்பர்ஸ்டார் பிட்சா.

Superstar Pizza Trichy

ஒவ்வொரின் சுவைக்கும் ஏற்ப அவர்களின் மெனு படி சமைத்து தரப்படுகிறது. புதிய புதிய டாப்பிங்ஸைக் (toppings) கொண்ட தயாரிக்கப்படும் பீஸ்ஸாக்கள் வாயில் எச்சில் உறவையும். வெஜ் பிட்சாவில் துவங்கி பல விதமான நான் வெஜ் பிட்சாக்களும் இங்கு வழங்கப்படுகின்றன. 

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது'னு தெரியலையா !! இதோ உங்களுக்காக....

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது'னு தெரியலையா !! இதோ உங்களுக்காக....

பாட்சா பிரியாணி மையம் (ஹலால்) & கார்டன் உணவகம்

பாட்சா பிரியாணி மையம் (ஹலால்) & கார்டன் உணவகம், ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய உணவுக்கான பிரபலமான இடமாகும். தோட்டத்தைப் பின்னணியில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

Batcha Briyani Center Trichy

திருச்சியில் பிரியாணி பிரியர்களுக்கு இந்த உணவகம் first சாய்ஸ். பிரியாணி மட்டுமின்றி ஒரு முழு உணவகமாக டிபன் வகைகளில் துவங்கி பல விதமான சாப்பாடு வகைகளும் இங்கு பட்ஜெட் விலையில் பரிமாறப்படுகின்றன. 

கல்லுப்பு 

BBQ உணவுகளை விரும்பாத இன்றைய தலைமுறையினரே இருக்க முடியாது. அப்படி திருச்சியில் அதற்கான ஸ்பெஷல் கடையை நீங்கள் தேடினால், உங்களுக்கான இடம் தான் இந்த கல்லு உப்பு.

Kalluppu Restaurant Trichy

தனித்துவமான ஒரு சுவை இந்த உணவகத்திற்கு இருப்பதாக வாடிக்கையாளர்களின் கமெண்ட். தந்தூரி சிக்கன் மீன் BBQ என இங்கிருக்கும் மெனு நீளம். அதே போல, ஃபிரைடு ரைஸ், பானங்கள் போன்றவையும் பட்டியலில் இடம் பெற தரவில்லை.  

Foodie'யா நீங்கள்..? சென்னையில் மிஸ் பண்ண கூடாத இடங்கள் !!

Foodie'யா நீங்கள்..? சென்னையில் மிஸ் பண்ண கூடாத இடங்கள் !!

திருச்சி சிக்கன் ஸ்ட்ரீட்

சிக்கன் விரும்பிகள் திருச்சி வந்தால் நிச்சயமாக தவறவிட கூடாத விஷயமொன்று இந்த திருச்சி சிக்கன் ஸ்ட்ரீட். மக்களை கவர்ந்த பல வகையான சிக்கன் ரெசிபிக்கள் இங்கு கிடைக்கின்றன.

Trichy Chicken Street

பட்ஜெட் விலையில், தள்ளுவண்டி கடையில் இங்கு கிடைக்கும் உணவுகளை தினம்தோறும் வயிறார புசித்து செல்பவர்கள் அதிகம்.சிக்கன் கிரேவி, சிக்கன் பிரை என பலதும் மக்களின் ஃபேவரட்