ஊரும் சோறும் - 1000 கோவில் நகரம் காஞ்சிபுரத்தில் மிஸ் பண்ண கூடாத இடங்கள்!

Kanchipuram
By Karthick Jun 06, 2024 11:40 AM GMT
Report

1000 கோவில்களின் நகரம் எனப்படும் சென்னை அருகில் இருக்கும் உலகளவில் புகழ் பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம். வழிபாட்டு தளங்களை தன்னில் அடுத்தடுத்து அடிக்கி வைத்திருக்கும் இந்நகரம் ஆண்டு தோறும் பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது.

Kanchipuram

நீங்களும் அப்படி ஒரு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள் உணவருந்த சிறந்த சில இடங்களை குறித்து இந்த இடத்தில் காணலாம். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கம் உண்டு.

அதனால் சைவ, அசைவ என இரு உணவு வகைகளை குறித்தும் இதில் குறிப்பிட்டுள்ளோம்.

Foodie'யா நீங்கள்..? சென்னையில் மிஸ் பண்ண கூடாத இடங்கள் !!

Foodie'யா நீங்கள்..? சென்னையில் மிஸ் பண்ண கூடாத இடங்கள் !!

சைவ உணவு

ஹரிதம் உணவகம்

சென்னையிலிருந்து 2 மணிநேரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் போன்ற சூழலை அளிக்கும் உணவகம் ஹரிதம் வெஜ் உணவகம். இந்த உணவகம் தினை அடிப்படையிலான உணவுகளுக்கு பெயர் பெற்றதாகும்.

best places to eat in kanchipuram

மெனுவில் தினை அடிப்படையிலான மினி டிபன், இட்லி, பூரி மற்றும் பல சுவையான பட்டியல் இடம் பெற்றுள்ளன. வாழை இலையில் பாரம்பரிய முறையில் வழங்கப்படும் ஆடம்பரமான மற்றும் நிறைவான மினி உணவை பலரும் விரும்புகிறார்கள்.

ஹோட்டல் சக்தி கணபதி

பாரம்பரியமான தமிழ் கலாச்சார முறையில் சைவ உணவு பட்ஜெட்டில் நீங்கள் சாப்பிட விரும்புகுறீர்களா? அப்படி என்றால் நீங்கள் தேர்வு செய்யும் பட்டியலில் நிச்சயாமாக ஹோட்டல் சக்தி கணபதி இருக்கவேண்டும்.

best places to eat in kanchipuram

இங்கு பருப்பு, பொரியல் மற்றும் சாதம் போன்ற பாரம்பரிய சைவ உணவுகளை வழங்குகிறார்களா. பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் அப்பளம், சாம்பார், காரக் கொழும்பு, ரசம், ஊறுகாய், கூட்டு போன்ற உணவுகளை பரிமாறுகிறார்கள்.

அசைவ உணவு

சிக் பிளாஸ்ட் (Chick Blast)

காஞ்சிபுரம் வந்துட்டு நீங்கள் அசைவ உண்வு சாப்பிட கடை தேடினால், உங்கள் தேர்வு பட்டியலில் இருக்க வேண்டிய இடம் சிக் பிளாஸ்ட்(Chick Blast). பட்ஜெட்டிக்குள் அடங்கும் இந்த உணவாகும் பெரிய செலவுகளையும் நமக்கு வைப்பதில்லை. அதுவும் உங்களுக்கு சிக்கன் சம்மந்தபட்ட உணவுகள் அலாதி பிரியம் என்றால், நேராக இங்கே செல்லலாம்.

best places to eat in kanchipuram

வறுத்த சிக்கன், பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு இந்து பிரபலமான இடமாகும். இங்கு விலை பட்டியல் ரூ.29 இல் தொடங்குகிறது. மெனுவில் வறுக்கப்பட்ட சிக்கன், பீஸ்ஸாக்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான விருப்பங்கள் உள்ளன.

ஹனி கிச்சன்

கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற நகரமான காஞ்சிபுரத்திற்கு வந்து அசைவ உணவை தரமான high budget'ஆக இருந்தாலும் பரவாயில்லை என விரும்பும் நபராக நீங்கள்.

best places to eat in kanchipuram

இது உங்களுக்கான சாய்ஸ் தான். ஹனி கிச்சன் உணவகம் அசைவ பிரியர்களுக்கு மிகவும் highly recommended. இங்கு உணவு சாப்பிட்டவர்கள் பலரும் உணவகம் சுத்தமான, இனிமையான சூழலை வழங்கியது என்றே முதலில் குறிப்பிடுகிறார்கள். வரவேற்பு பானத்தில் துவங்கி, சிக்கன் 65 முதல் மட்டன் பிரியாணி வரை என பல விதமாக நீளுகிறது மெனு.

99 kms Coffee Stop

99 கிமீ காபி ஸ்டாப் நகரில் பிரபலமான சுய சேவை(self served) உணவகம். இங்கு ஓய்வெடுக்க வசதியான இடமாகவும் உள்ளது.நாம் கேட்கும் உணவுகளை நாம் கண் முன்னரே சமைத்து தருகிறார்கள் தேர்ச்சி பெற்ற சமையல் கலைஞர்கள்.

best places to eat in kanchipuram

தனித்துவமான ஒரு feeling'ஐ தருவதால் சற்று விலையுறவு என்றாலும் உணவு தரமாக இருக்கின்றது என்றே பலரும் review செய்துள்ளார்கள். புத்துணர்ச்சியூட்டும் தின்பண்டங்களில் துவங்கி நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான நீர் விருப்பங்களில் துவங்கி வாழைப்பூ வடை, கருப்பட்டி பணியாரம் இங்கு ஸ்பெஷல்.

Zamruth Home-Style Food

நீங்கள் குழுவாக பயணித்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கம் இருக்கின்றதா? எங்கு சாப்பிடுவது என தெரியாமல் குழம்புகுறீர்களா? நேராக உங்க எண்ணத்தை Zamruth Home-Style Food கடைக்கு விடுங்கள்.

best places to eat in kanchipuram

பிரியாணி, grilled சிக்கன் முதல் பிரியாணி குளிர்பானங்கள் என இங்கு வழங்கப்படும் உணவு பட்டியல் நீளம். உங்கள் பட்ஜெட்டில் அடங்கும். தரமான உணவு வகைகளை வழங்கி பரிமாறுவதில், இது அந்நகரில் புகழ் பெற்ற கடையாகவும் விளங்குகிறது.