Foodie'யா நீங்கள்..? சென்னையில் மிஸ் பண்ண கூடாத இடங்கள் !!

Tamil nadu Chennai
By Karthick May 24, 2024 06:34 AM GMT
Report

சென்னை - தமிழகத்தின் மிக முக்கிய ஈர்ப்பு. தென்தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல இடங்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் அதிகம். அப்படி வருபவர்களுக்கு சென்னையில் எங்கெல்லாம் சிறப்பான உணவு கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

விடிய விடிய உணவு கடைகளை தெருக்கள் எங்கும் அலங்கரிக்கும் சென்னையில், சில பிரபல இடங்களை அறிவோம்.

சைவ உணவுகள்

பாரதி மெஸ் (Bharathi Mess)

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரதி மெஸ் சைவ உணவகத்திற்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த உணவகத்தின் கிளை மயிலாப்பூரிலும் அமைந்துள்ளது.

Bharathi mess Chennai

இங்கு செயற்கை நிறமூட்டிகளையோ, அஜினமோட்டோ போன்றவைகளயோ இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பது மற்றுமொரு சிறப்பு. டிபனில் இட்லியில் துவங்கி தோசை, உப்மா என நீளும் பட்டியலில், கலந்த உணவுகளும் மினி மீல்ஸ்'ஸும் சுட சுட பரிமாறுகிறார்கள்.

தி பிளேட்(The Plate)

சென்னை ராயப்பேட்டையின் express avenue'வில் இருக்கும் தி பிளேட் சைவ உணவிற்கான பிரத்யேக இடமாகும். பெரும்பாலான ஷாப்பிங் மாலில் இது போன்ற உணவகங்கள் அரிதே.

The Plate EA chennai

ஆனால், சுவையான சைவ உணவுகளை பாரம்பரியமாகவே பரிமாறி வருகிறார்கள் தி பிளேட். கொஞ்ச high class மக்களுக்கு தான் என்றாலும், சென்னைக்கு ஒரு முறை விசிட் அடிப்பவர்களுக்கான சைவ உணவகம் இது.

அசைவ உணவுகள்

தம்பி விலாஸ் - அண்ணா நகர்.

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள தம்பி விலாஸ், அசைவ உணவுகளுக்கு புகழ் பெற்றதாகும். தென்னிந்திய தமிழ் உணவு வகைகள் குறிப்பாக கடல் உணவு, பிரியாணி வகைகள், முகலாய உணவு ரெசிபி, போன்றவற்றை விரும்புவோருக்கு சரியான இடம் இதுவே.

Thambi vilas chennai

இட்லி, தோசை, ஊத்தப்பம் வகைகளில் மட்டுமே சுமார் 21 வகைகளை பரிமாறும் இந்த உணவகம், பரோட்டா - சப்பாத்திக்கு தனி மெனு, சிக்கன், மட்டன், கடல் சார் உணவுகளுக்கு தனி மெனு என தனி தனியாக பரிமாறி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மாத்ஸ்யா (Mathsya) - அடையாறு

சென்னை அடையாரில் அமைந்துள்ள மாத்ஸ்யாவைத் தவிர, கடல் உணவிற்கு சிறப்பான இடமாகும். கடல் சார் உணவுவகைகளை விரும்புபவர்கள் சென்னைக்கு வந்தால் நிச்சயமாக, ட்ரை செய்ய வேண்டிய இது.

Mathsya Adyar Chennai

காலை டிபனில் துவங்கி இரவு உணவு, ஐஸ்கிரீம், dessert என பல வகைகளை கொண்டிருக்கும் இங்கு பெரிதும் மக்களை ஈர்த்துள்ளது என்றால் அது, கடல் சார் உணவுகளே. சென்னையில் 3 கிளைகளை இந்த உணவகம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயர் மெஸ்

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள நாயர் மெஸ், சில பாலிவுட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புத் தளமாகவும் இருந்துள்ளது. இடமும் பிரபலம் இங்கு பரிமாறப்படும் உணவும் பிரபலம்.

Nair mess Chennai

தென்னிந்திய உணவு வகைகளுக்குப் பிரபலமான இந்த உணவகத்தில், அன்பான விருந்தோம்பலும் முக்கிய இடத்தை பிடிப்பதாக பலரும் அனுபவங்களை பகிர்கிறார்கள்.

Grillbox Barbeque

Barbeque உணவு dining இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பங்களையும் ஈர்த்து வரும் சூழலில், சென்னை ஆர்.கே சாலையில் அமைந்துள்ள Grillbox barbeque ஒரு தனித்துவமான அனுபவத்தை வாஹன்ஜி வருகின்றது.

Grill Box Barbeque

இங்கு இந்திய, சீன, இத்தாலியன், மெக்சிகன் மற்றும் அமெரிக்க உணவு வகைகள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான உணவுகளும் பரிமாறப்படுகிறது. இந்த உணவகத்தில் பீர், ஒயின், காக்டெய்ல் மற்றும் மாக்டெய்ல் உள்ளிட்ட பல்வேறு Drink'சுகளும் வழங்கப்படுகின்றன.

Rollover - ராஜா அண்ணாமலை புரம்

ஐஸ்கிரீம் வகைகளை விரும்பாதவர்களே இல்லை. அப்படி விரும்புவோருக்கு சென்னையில் ஒரு சிறந்த இடம் என்றால், அதில் ராஜா அண்ணாமலை புரத்தில் அமைந்துள்ள Roll-over நிச்சயமாக இருக்கும். இங்கு ஐஸ்கிரீம்களை உருவாக்கும் விதமே பெரிதாக பலரையும் கவருகிறது.

Roll over chennai

இங்கு தவறவிடக்கூடாத வெரைட்டி - ரெட் வெல்வெட் ஜார், பான், மோஜிடோ, பாப்கார்ன். சென்னை நிறைய food street'களுக்கும் பிரபலமானதாகும்.

Kora food street chennai

ஒரு food street'இல் நாம் விரும்பும் தேடும் பல உணவு வகைகளும் இருக்கும். சாதாரண டிபனில் துவங்கி continental வகைகள் வரை கிடைக்கும் பல food street'க்கள் சென்னை உள்ளன.

அவற்றில் முக்கிய இடத்தை சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள Kora Food Street பிடித்துள்ளது. அதே நேரத்தில், Street food வகைகளை விரும்பி உண்ணுவோர் தவறவிட கூடாத இடம் சென்னை சவுகார்பேட்டை.

Sowcarpet food street

சென்னையின் பரபரப்பான - பழமையான பகுதிகளில் ஒன்றான இங்கு, கச்சோரி, சாண்ட்விச்கள், இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் லஸ்ஸி போன்ற சில சுவையான வட இந்திய சிற்றுண்டிகளை சுவைக்கலாம்.