ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது'னு தெரியலையா !! இதோ உங்களுக்காக....

Tamil nadu Coimbatore India
By Karthick Jun 11, 2024 11:05 AM GMT
Report

கொங்கு நாடு என குறிப்பிடப்படும் கோயம்புத்தூர், பல கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு நகரமாக திகழ்கிறது. சுற்றுலா, வேலைவாய்ப்பு என மாநிலத்தின் மிக முக்கிய நகரமாக இருக்கும் கோவையில் வயிறார சாப்பிட எங்க போலாம்'னு டவுட்டா இருக்கா. இந்த Article உங்களுக்காக தான்.

பட்ஜெட் முதல் high budget உணவகங்களில் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுக்கு சரியாக எது அமையும் என்றும் நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வீடு சாப்பாடு By மாதம்பட்டி பகஷாலா

மாதம்பட்டி தற்போது தமிழக அளவில் கவனமீர்த்த ஒரு பெயராக மாறியுள்ளது. பட நடிகரான ரங்கராஜ்'ஜின் குடும்ப பாரம்பரிய மாதம்பட்டி கோவை மக்களுக்கு நீண்ட காலமாகவே பரிட்சயம். இது நாம் இருக்கும் இடத்திற்கு ஆர்டர் செய்து சாப்பிடும் உணவாகும்.

[AURNGY}

இங்கு பட்ஜெட் விலையில் பல உயர்தர வெஜ் உணவுகள் பரிமாறப்படுகின்றன. பட்டர் மில்க், ரோஸ் மில்க் என பானங்களில் துவங்கி, இட்லி - தோசை - பணியாரம் பொங்கல் வடை என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவை மட்டுமின்றி டின்னர் ஸ்பெஷலாக சப்பாத்தி, இடியாப்பம், பரோட்டா வகைகளும் உண்டு.

ஸ்ரீ ஆனந்தாஸ்

தென்னிந்திய உணவு வகைகளை வழங்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக திகழ்கிறது இந்த ஸ்ரீ ஆனந்தாஸ். இந்த உணவகத்தில் சைவ உணவு வகைகளில் துவங்கி சிக்கன் டிக்கா மசாலா வரை எவரையும் மகிழ்விக்க கூடிய உணவுகள் உள்ளன.

Sree anandhaas

இவை மட்டுமின்றி காலை - மதிய உணவுப் பொருட்களின் பட்டியலும் பெரியதாக உள்ளது. உள்ளூர் மக்களிடம் வரவேற்பை பெற்ற இடமாக இருக்கும் இந்த ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகம் பட்ஜெட் friendly என்பதும் குறிப்பிடத்தக்கது.

Afghan Grill

கோவை வரும் சிலருக்கு continental உணவு வகைகளில் மீது பெரிய ஆர்வமிருக்கும். அப்படி நீண்ட பிரபலமடைந்து வரும் Afghan உணவு பிரியரா? உங்களுக்கான இடம் தான் Afghan Grill.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

ஆப்கான் உணவு வகைகளில் நிபுணத்துவம் உணவகமாக திகழ்கிறது Afghan Grill. தி ரெசிடென்சி (The Residency) ஹோட்டலின் இந்த உணவகம் அமைந்துள்ளது. திறந்த வெளியில் வானத்தை பார்த்த படி, வாடிக்கையாளர்களுக்கு ஈடுஇணையற்ற ஒரு அனுபவத்தை வழங்குகிறது Afghan Grill. கிரில் வகைகளில் ஆப்கானிய சமையல் தரத்தில் BBQ கட்டணத்தில் இந்த உணவகம் வழங்குகிறது.

The French Door

சுற்றுலா வருவபவர்கள் என்றால் பெரும்பாலும் ஐரோப்பா கண்டத்தில் அமைந்திருக்கும் நாடுகளில் இருந்து தான் மக்கள் வருகிறார்கள். அவர்களை கவர, துவங்கப்படும் பல continental ஹோட்டல்கள் லோக்கல் மக்களை தற்போது பெரிதும் கவறந்துவிட்டன.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

அப்படி, கோவையில் அமைந்திருக்கும் The French Door, cafe மற்றும் continental ஹோட்டலாக மக்களை கவர்ந்துள்ளது. ஐரோப்பிய, பிரஞ்சு உணவுகள் மட்டுமின்றி நாட்டில் பலரை கவர்ந்துள்ள வட இந்திய உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளும் இங்கு மெனுவில் அடங்கியுள்ளன. ஹோட்டலின் கஃபே அமைப்பும் டைனிங்கும் மக்களை எளிதில் கவர்ந்து விடுகிறது

Bird on Tree

உங்களின் விருப்ப பட்டியலில் வட இந்தியா மற்றும் தந்தூரி வகை உணவுகள் இடம்பெறுகின்றனவா? அப்படியென்றால் கோவையில் நீங்கள் ஒரு முறையாவது விசிட் அடிக்க வேண்டிய இடம் Bird on Tree. பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச உணவுகள் இங்கு பரிமாறப்படுகிறது.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

இங்கு பரிமாறப்படுபவை இரண்டாக அதாவது கஃபே - மெயின் டைனிங் என பிரிக்கப்பட்டுள்ளது. ஆசிய, கான்டினென்டல், வட இந்திய, தந்தூர் போன்ற உணவு வகைகளை மெயின் டைனிங் வழங்குகிறது. அது போக இங்கு, பல வெரைட்டி பானங்கள் - குளிர்ந்தவை, சூடானவை வழங்கப்படுகின்றன.

Barbeque Nation - Town Hall, Coimbatore

தற்போதைய இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரையும் பெரிதாக கவர்ந்த ஒரு உணவு வகையாக உள்ளது Barbeque உணவுகள். அப்படி உங்களுக்கு Barbeque தான் புடிக்குமா? நீங்கள் கோவையில் மிஸ் செய்ய கூடாத இடம் Barbeque Nation - Town Hall, Coimbatore.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

நண்பர்களுடன் ஒரு குழுவாகவோ அல்லது ஆடம்பரமான இரவு உணவை வழங்க விரும்பினால், இதுவே பெஸ்ட் சாய்ஸ். இங்கு கிரில் வகையில் பல வகையான ஸ்டார்டர்கள் உள்ளன. அது போக மீன் மற்றும் இறால்கள் குறிப்பாக பலரின் favorite. அதே நேரத்தில் இங்கு சென்றால் குல்ஃபி நிச்சயமாக நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்று.

Ammayi Veedu Pot Cook

பாரம்பரியமான வழக்கத்தில் உணவு சாப்பிட நீங்கள் விரும்புகுறீர்களா? கோவையில் பெஸ்ட் சாய்ஸ் அம்மை வீட்டு பாட் குக் தான். பெயரிலேயே உள்ளது - மண் பானைகளில் உணவுகளை சமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற உணவகம் இது.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

மெனு பெரிய ஆச்சரியம் கொடுப்பதாக இருக்காது. ஆனால், இங்கு சமைக்கப்படும் முறை தான் முக்கியமானது. டிபனில் இட்லியில் துவங்கி வெரைட்டி ரைஸ், பரோட்டா, fast food, பிரியாணி என வகை இங்கு பரிமாறப்படுகிறது.

Food street fiesta

ஒரு food street'இல் நாம் விரும்பும் தேடும் பல உணவு வகைகளும் இருக்கும். சாதாரண டிபனில் துவங்கி continental வகைகள் வரை கிடைக்கும் பல food street'க்கள் கோவையில் உள்ளன.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

அந்த பட்டியலில் முக்கியமான இடமாக உள்ளது Food street fiesta. Street food உணவு வகைகளை விரும்புவோர் முதல் dessert, continental, fast food, beverages என இங்கு பல உணவகங்கள் உள்ளன.

K.R. Chaats

chat உணவு பிரியர் என்றால் உங்களுக்கான கடை தான் இந்த K.R. Chaats. கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான தெரு உணவுக் கடையாகும். இது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலவிதமான சாட்களை வழங்குகிறது.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

இங்கு கிடைக்கும் ஒரு தனித்துவமான பாவ் பாஜி, வறுத்த சமோசா பெரும் ஹிட். அடிக்கடி இங்கு வந்து கலன் மற்றும் தஹி பூரியை சாப்பிடுபவர்கள் அதிகம்.

Madurai Famous Jigarthanda LLP - Since 1977

ஜிகர்தண்டா தமிழக குறிப்பாக தென் தமிழக மக்களை அதிகளவில் ஈர்த்த ஒரு பொருளாகவும். பல இடங்களில் கிடைத்தாலும், அந்த ஒரு authentic மதுரை ஸ்பெஷல் வேறெங்கும் கிடைக்காது.

ஏனுங்க...கோயம்புத்தூர் போறீங்களா? - எங்க சாப்பிடறது

அதனை ஓரளவு ஈடுசெய்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இடம் தான் கோவையின் Madurai Famous Jigarthanda LLP - Since 1977. பாலில் தயாரிக்கப்பட்ட பிரபலமான ஜிகர்தண்டா பாரம்பரியமாக பல்வேறு ஸ்டைலில் பழைய ஸ்டீல் கிளாஸ்களில் வழங்கப்படுகிறது. கோயம்புத்தூரில் உள்ள இந்த பானத்தின் சுவை மதுரையில் உள்ளதைப் போலவே இருப்பதாகவும், அவர்களின் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது.